ஆண்டிப்பட்டி அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபா் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருேக ரெயில் முன் பாய்ந்து வாலிபா் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு-வருசநாடு சாலையில் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த க.விலக்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்த அடையாள அட்டை மூலம் இறந்தவர், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) என்பது தெரியவந்தது. சர்க்கரை நோயால் அவதிப்பட்ட பாலமுருகன் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பாலமுருகன், மனமுடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.