மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் அலுவலகம் உள்ளது. இந்த முகாமுக்கு, என்.சி.சி. டைரக்டர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், தமிழ்நாடு துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் அதுல் குமார் ரஸ்தோகி ஆகியோர் நேற்று வருகை தந்தனர். அப்போது, இடையப்பட்டியில் துணை இயக்குனர் ஜெனரல் என்.சி.சி மற்றும் அனைத்து தளபதிகளும் என்.சி.சி.யில் உள்ள சவால்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கம் அளித்தனர். பயிற்சி தொடர்பான விஷயங்களுக்கான புதிய யோசனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு நிலங்களை பார்வையிட்டு பாதுகாப்பு நில ஆக்கிரமிப்பு காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் அனைத்து குழு தளபதிகள் கலந்து கொண்டனர்.