நாசரேத் திருமறையூரில் சேகர மன்ற தொடக்க விழா

நாசரேத் திருமறையூரில் சேகர மன்ற தொடக்க விழா நடந்தது.

Update: 2023-07-07 18:45 GMT

நாசரேத்:

சி.எஸ்.ஐ. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வந்த திருமறையூர் மறுரூப ஆலயம் தனி சேகரமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாகவும், திருமண்டல நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறி நன்றி தெரிவிக்கும் விழாவும் திருமறையூர் மறு ரூப ஆலயத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விழாவில் திருமறையூர் சேகரத்தின் முதல் குருவானவர் ஜான் சாமுவேல் வரவேற்றார். திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் திருவிருந்து ஆராதனையில் சேகர புது கணக்கு புத்தகத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார். திருமறையூர் தொனி எனும் மாத இதழை உப தலைவர் வெளியிட லே செயலர் பெற்றுக் கொண்டார். விழாவில் அகப்பைகுளம் சேகர குருவானவர் பாஸ்கரன், குருவானவர்கள் சிமியோன் ஞானராஜ், ஜெய்சன் மற்றும் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்