பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.;
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு கலைஞர்களின் தவில், நாதஸ்வரம், பக்தி இன்னிசைகச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், பன்னிருதிருமுறைகள் இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நவராத்திரி பெருவிழாவினை பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் முருகையன் தொடங்கி வைத்தார். சர்வாலய அருட்பணி, அறப்பணி அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.