வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

அம்மாப்பேட்டை வீரமகா காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.;

Update:2023-10-16 01:56 IST

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகா காளியம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று வீரமகா காளியம்மன், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்