தென்திருப்பதி திருமலை கோவிலில் நவராத்திரி விழா
மேட்டுப்பாளையம் தென்திருப்பதி திருமலை கோவிலில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருப்பதி திருமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் உள்ளது. நீ கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் கண்ணை கவரும் பல வண்ண வண்ண பொம்மைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாதஸ்வர இசை மேளதாளத்துடன் கொடி மரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு பெரிய சிவச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கே.ஜி. குழும நிறுவனங்களின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் கே.ஜி டெனிம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று சின்னசேஷ வாகனம், ஸ்நபன திருமஞ்சனம் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா, 1-ந் தேதி கருட சேவை, 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.