தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.;
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு.சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைதொடர்ந்து தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்துபக்தர்கள் பூத்தட்டு கொண்டு வந்து தேவதுர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.