சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரிய நெகமத்தில் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.;
பெரிய நெகமம் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று விளக்கு பூஜை நடந்தது. வருகிற 23-ந்தேதி இரவு மணக்கு சரஸ்வதி பூஜை நடக்கிறது. 24-ந்தேதி அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு, சுவாமிக்கு மாவிளக்கு பூஜை மற்றும் ராகு தீப பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்பு சேர்கை, அம்மன் திரு வீதி உலா மற்றும் அலங்கார வான வேடிக்கைகள் நடக்கிறது. 26-ந் தேதி, காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறுகிறது