பாலா பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா
பாலா பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.;
நெமிலி பாலா பீடத்தில் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற 45-ம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா ஆயுதபூஜையுடன் நிறைவு பெற்றது. பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி 200 குழந்தைகளுக்கு பாலா படம், குங்குமம், எழுதுபொருட்கள் அடங்கிய பைகளை அளித்து ஆசி வழங்கினார். பாலா பீடநிர்வாகி மோகன்ஜி அன்னை பாலா ஆராதனையை நிகழ்த்தினார். விஜயதசமியன்று குருஜி நெமிலி பாபாஜி எழுத்தறிவித்தல் செய்து வைத்தார். திரைப்பட பாடகர் பிரபாகரன், இசை அமைப்பாளர் ஆர்.கே.சுந்தர் மற்றும் இசைக் குழுவினர் நவராத்திரி இன்னிசையை வழங்கினார்கள். செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அன்னை பாலா ஆத்மீக குடும்பங்கள், நெமிலி இறைபணி மன்ற அங்கத்தினர்கள், ஊர் பொதுமக்கள் செய்தனர்.