ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

Update: 2023-10-22 13:36 GMT

தளி

உடுமலை நகராட்சி தென்னைமரத்து வீதியில் விஸ்வகர்மா ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பாலவிநாயகர், பாலமுருகர், சொர்ண ஆகர்ஷண பைரவர், வாராகி அம்மன், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, சஷ்டி, கார்த்திகை, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி, நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை பூஜை, காமாட்சியம்மனுக்கு பௌர்ணமி பூஜையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நவராத்திரி விழாவை யொட்டி கடந்த 15-ந் தேதி முதல் காமாட்சி அம்மன் நாள்தோறும் விதவிதமான அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி மற்றும் கொலு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் பொதுமக்கள் நாள்தோறும் கோவிலுக்கு சென்று விதவிதமான அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இதனால் கோவில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்