பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு விழா

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-08-18 17:50 GMT

கூட்டுறவுத்துறை சார்பில், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் அவர், நாயக்கனூர், காலனம்பட்டி, பெரும்புள்ளி, கொல்லப்பட்டி, ஏ.வி.பட்டி, முத்தம்பட்டி, சத்திரப்பட்டி, நொச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு பொருட்களை வினியோகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரத்னாதேவி, சவுந்தரராஜன், வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி, வடமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், வடமதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், தென்னம்பட்டி ஊராட்சி தலைவர் கோமதி பாலசுப்பிரமணியன், குளத்தூர் ஊராட்சி தலைவர் சுகந்தி சண்முகசுந்தரம், தென்னம்பட்டி ஊராட்சி தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்