அக்னி வெயிலில் எப்பொழுதும் நீர் நிலைகள் வறண்டு காட்சியளிக்கும். ஆனால் மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடக்கம் முதலே மழை பெய்து வந்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பின. மதுரை தெப்பக்குளத்தில் நீர் நிரம்பி ததும்பி நிற்கும் அற்புத காட்சியை கோடையிலும் இயற்கையின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.