கோத்தகிரியில் இயற்கை விழிப்புணர்வு முகாம் நிறைவு

கோத்தகிரியில் இயற்கை விழிப்புணர்வு முகாம் நிறைவு

Update: 2023-03-10 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி வனத்துறைக்கு சொந்தமான லாங்வுட் சோலை சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் வனத்துறை மற்றும் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் சார்பாக 4 நாட்களாக நடைபெற்ற 'இயற்கை விழிப்புணர்வு முகாம்' நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வனசரகர் சிவா தலைமை வகித்தார். இறுதி நாள் நிகழ்வில் இயற்கை போராளி ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் லாங் வுட் சோலை பாதுகாப்புக் குழு செயலரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான கே.ஜே.ராஜு, அக்கரை அறக்கட்டளையின் வட்டார இயக்குநர் வினோபாப், மெட்ராஸ் கிருஸ்டியன் சமுதாய கல்லூரி பேராசிரியர் லெனின், வனவர் விவேகானந்தன் ஆகியோர் சிறப்பு கருத்தாளர்களாக பங்கேற்றனர். இதில், அண்மையில் உயர்நீதி மன்றம் அளித்த நீலகிரியிலுள்ள அந்நிய நாட்டு தாவரங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். அந்நிய தாவர இனங்களை அகற்றினால் பல்லுயிர்ச்சூழல் பெருகுவதுடன் அழிந்துபோன பல தாவர இனங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளில் முப்பது கி.மீ.வரை நடக்கும் யானைகள் தினமும் பதினெட்டு முறை போடும் கழிவுகளால், அவை நடக்கும் பாதையெல்லாம் காடுகள் உருவாகும். யானைகள் அட்டகாசம் என்ற கருத்து தவறானது என்பன போன்ற பல கருத்துக்கள் கூறப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்