நட்டாத்தி சாரோன் ஆங்கிலப்பள்ளி ஆண்டு விழா
நட்டாத்தி சாரோன் ஆங்கிலப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி சாரோன் மெட்ரிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சுப்பிரமணியபுரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வலசக்காரன்விளை சேகரகுரு ஜெபராஜ் ஆரம்ப ஜெபம்செய்து தொடங்கி வைத்தார். பள்ளித்தாளாளர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சீலா வசந்தி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெருங்குளம் நகர பஞ்சாயத்து தலைவி டாக்டர் எஸ். புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழவள்ளான் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசீலி அருண், ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.