நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

Update: 2023-03-29 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா, நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் செல்லமுத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் ஜோதிபாசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தனர். பின்னர் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட பொறுப்பு பேராசிரியர்கள் சங்கர், பெரியசாமி, ரூபா, உமாமகேஸ்வரி, வேலுச்சாமி மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்