நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

கரிக்கல் உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.;

Update: 2023-10-05 18:14 GMT

சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஊராட்சியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் காந்திஜி உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகம் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை நாட்டு நலப்பணி திட்ட கூடுதல் பொறுப்பு இணை இயக்குனர் ஆர்.பூபதி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பி.உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.செல்வராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், தாளாளர் வி.சாமுவேல் ஜெயசீலன், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், தலைமை ஆசிரியர் சா.எப்சிபா கேத்தரின், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜாய்ஸ் எப்சிபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முடிவில் ஆசிரியர் அகஸ்டி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்