வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்;
நெகமம்
நெகமம் அடுத்த வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவராசு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். முகாமில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். இதில் பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஜப்பார், பொன்மலை குமாரசாமி, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு நலப்பணி திட்டம் குறித்து மாணவர்களிடையே பேசினார்கள். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.