நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன், புன்னையாபுரம் ஊராட்சி அலுவலர் வெள்ளத்துரை, சிங்கிலிப்பட்டி இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முனியாத்தாள், ஊராட்சி அலுவலர் தங்கத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக விழாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.