விக்கிரவாண்டியில்தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

விக்கிரவாண்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-25 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் இளவரசன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். ஊர்வலம் விக்கிரவாண்டி கடை வீதி வழியாக சென்று பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

ஊர்வலத்தில் தனி தாசில்தார் ஜோதிவேல், துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) ஜோதிப்பிரியா, முது நிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆறுமுகம், மெகருனிசா, சிவகாமி, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெயபிரகாஷ் உள்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முண்டியம்பாக்கம்

இதேபோல் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதற்கு கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், உதவி மருத்துவ அலுவலர் ஸ்ரீராம், நிர்வாக அலுவலர்கள் சிங்காரம், ஆனந்தஜோதி, இளநிலை நிர்வாக அலுவலர்கள் முருகவேல், புஷ்பா, அலுவலர்கள் ரபி யேசுதாஸ், பிரேமா, செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் மல்லிகா, கீதா குமாரி மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்