தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
காட்பாடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சரளா தலைமை தாங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கவுசல்யா, புவனா, துளசி, செலின், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பது சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகள் ஊர்வலம் சென்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.