தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்;

Update: 2023-01-25 18:45 GMT

மயிலாடுதுறையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, தேர்தல் தாசில்தார் ஜெனிட்டாமேரி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்