தேசிய உருது புத்தக கண்காட்சி

வாணியம்பாடியில் தேசிய உருது புத்தக கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-31 16:41 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் கல்லூரி மைதான பகுதியில் வருகிற 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தேசிய உருது புத்தகங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் கல்லூரியின் மைதான பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புத்தக கண்காட்சியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகள், வாகன போக்குவரத்து மற்றும் புத்தக கண்காட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, புத்தக கண்காட்சி நடைபெறும் சமயத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும், கொரோனா தொற்று பரவி வருவதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆவணங்களை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்