தேசிய ஒருமைப்பாடு சர்வ சமய மாநாடு
முக்கூடல் அருகே தேசிய ஒருமைப்பாடு சர்வ சமய மாநாடு நடந்தது.
முக்கூடல் அருகே மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேசிய ஒருமைப்பாடு சர்வ சமய மாநாடு நடைபெற்றது. பகவான் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய புத்தகம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. முதல் புத்தகத்தை அவ்வை என்.அருள் வெளியிட நெல்லை ஷிபா மருத்துவமனை தலைவர் டாக்டர் எம்.கே.எம்.முகம்மது ஷபி பெற்று கொண்டார்.
விழாவில் ம.தி.தா. இந்து கல்லூரி கல்வி கழக தலைவர் வக்கீல் மீனாட்சி சுந்தரம், ஓய்வுபெற்ற நீதிபதி ஞானபிரகாசம், வக்கீல் என்.கருணாநிதி, தொழில் அதிபர் ஜி.குப்புசாமி, டி.கே.எஸ்.கலைவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் என்.லாறி வரவேற்றார். முடிவில் ஆசிரமத்தின் துணைத்தலைவர் லியோ பால் சி.லாறி நன்றி கூறினார்.