தேசிய மாணவர் படையினர் 438 பேர் எழுதினர்
‘சி’ சான்றிதழ் தேர்வு: தேசிய மாணவர் படையினர் 438 பேர் எழுதினர்
நாகர்கோவில்,
2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படை (என்.சி.சி.) 'சி' சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு நாகர்கோவில் இந்து கல்லூரியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 'பி' சான்றிதழ் பெறுவதற்காக தோ்வில் மொத்தம் 445 பேர் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து நேற்று 'சி' சான்றிதழ் பெறுவதற்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் 438 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வுகளை எழுதினர். தேர்வுகளை ராணுவ கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை குழுவினர் என மொத்தம் 7 பேர் அடங்கிய குழுவினர் கண்காணித்தனர்.