தேசிய விளையாட்டு தின விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா நடந்தது.

Update: 2022-08-31 13:34 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு வகுப்புகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் தலா 7 அணிகளும், பெண்கள் பிரிவில் தலா 5 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் பி.பி.எட். 2-ம் ஆண்டு மாணவர்களும், பெண்கள் பிரிவில் பி.பி.எட். 2-ம் ஆண்டு மாணவிகளும் வெற்றி பெற்றனர்.

பின்னர் பரிசளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாணவர் கனிஷ்கர் வரவேற்று பேசினார். மாணவர் சுந்தர்ராஜ் அறிமுக உரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய முன்னாள் கோ-கோ விளையாட்டு வீரர், தூத்துக்குடி தென்னக ரெயில்வே தொழில்நுட்பவியலாளர் கண்ணன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். சிறப்பு விருந்தினருக்கு மாணவி திவ்ய பாரதி நினைவு பரிசு வழங்கினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நெல்சன் துரை, சிவா, மாணவர்கள், கைப்பந்து விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர். முடிவில் மாணவர் ரஞ்சித்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்