தேசிய விளையாட்டு போட்டி விவகாரம்: முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
தேசிய விளையாட்டு போட்டி விவகாரத்தில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி பங்கேற்காமல் போன விவகாரத்தில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்காத புகாரில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.