தேசிய மூத்தோர் தடகள போட்டி:வெள்ளி பதக்கம் வென்று நாசரேத் வீரர் சாதனை

தேசிய மூத்தோர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாசரேத் வீரர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-02-24 18:45 GMT

நாசரேத்:

தேசிய அளவிலான இந்திய மூத்தோர் தடகளப் போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற்றது. இப்போட்டியில் 65 வயது மூத்தோர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற நாசரேத் செ.பொன்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் இவர் 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு வெள்ளி பதக்கம் பெற்று தந்தார்.

இவரை நாசரேத் பொதுமக்கள், கால்பந்து வீரர்கள், தடகள வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்