பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-05-08 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் சா்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் கணினி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளின் சார்பாக 14-வது தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் நிகழ்ச்சிகளாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் படைப்புகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ஜீசஸ்ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கனகபாண்டியன் முன்னிலை வகித்தார். மாணவி சிவசங்கரி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் பாலமுருகன், பழனிச்சாமி மற்றும் மாலதி ஆகியோர் மேற்பார்வையில் பேராசிரியர்கள் பேராச்சி, மரியதங்கம், லின்ஸிபாலன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவி அகிலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்