தேசிய கருத்தரங்கம்

நெல்லை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம் நடந்தது

Update: 2022-11-25 22:22 GMT

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்று துறை சார்பில் நெல்லை மாவட்டத்தின் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் எனும் தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வரலாற்று துறை தலைவர் தீப்தி வரவேற்று பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கருத்தரங்க ஆய்வு நூலை வெளியிட்டார். கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கமல செல்வராஜ், எஸ்.டி. இந்து கல்லூரி வரலாற்று துறை தலைவர் பகவதி பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் ராமசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்