போடியில் தேசிய அறிவியல் தினவிழா

போடி பிச்சாண்டி பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா நடைபெற்றது.

Update: 2023-02-28 20:30 GMT

போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில், இந்த ஆண்டிற்கான விழா கருப்பொருளாக "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்" என்பதாகும் என்றார்.

இந்த விழாவையொட்டி அறிவியல் கண்காட்சியும் நடத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மேலும் அவற்றின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்