தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-18 19:54 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

குழுவினர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தேசிய தர மதிப்பீட்டு குழுவை சேர்ந்த டாக்டர்கள் அசோக்குமார், அல்மீடியா ஆகியோர் ஈடுபட்டனர்.

மருத்துவமனையின் சுகாதாரம், மருந்து இருப்பு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறு சிகிச்சை, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பயணிகள் விவரங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, சிகிச்சை முறை ஆகியவை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறப்பு நிதி

இந்த ஆய்வில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு, நிலைய மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து துணை இயக்குனர் கலுசிவலிங்கம் கூறுகையில், எம்.புதுப்பட்டி, குன்னூர், தளவாய்புரம், ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சான்று பெறுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது.

இந்த சான்று பெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சிறப்பு நிதியாக வழங்கப்படுகிறது. இந்த நிதி மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேசிய தர மதிப்பீட்டு சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்