கரூர் அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு நடந்தது.

Update: 2022-10-19 19:36 GMT

கரூர் அரசு கலைக்கல்லூரி நேற்று தேசிய தர மதிப்பீட்டுக்குழு தலைவர் ராஜாராமி ரெட்டி கொட்டிபோலு தலைமையில் ரமேஷ் அகாடி, ஸ்ரீகாந்த்ஸ்வந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வுக்காக கல்லூரிக்கு நேற்று வருகை புரிந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி வரவேற்று பேசினார். தொடர்ந்து துறைத்தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள், கல்வி சாராத துறைகள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டனர். மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் கலந்துரையாடல், ஆசிரியரல்லாத பணியாளர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) ஆய்வு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்