கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்; 764 வழக்குகளுக்கு தீர்வு
கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 764 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் சப்-கோர்ட்டு நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம், பீட்டர், முகமது சாதிக் உசேன் ஆகியோர் நடத்தினார்கள்.
இதில் அரசு வக்கீல் சம்பத்குமார், வக்கீல்கள் சந்திரசேகர், பாப்புராஜ், மோகன்தாஸ், சிவகுமார், நாகராஜன், சுந்தரபாண்டியன் மற்றும் சட்டப் பணிகள் உதவியாளர்கள் ஜோன்ஸ் இமானுவேல், மரிக்கொழுந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று 1,757 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் வங்கி வராக்கடன், கல்விக் கடன் வழக்குகள் 19, மோட்டார் வாகன விபத்து 11, சிறு குற்ற வழக்குகள் 734 என மொத்தம் 764 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட தொகை ரூ.98 லட்சத்து 82 ஆயிரத்து 660 ஆகும்.