தேசிய நூலக வார விழா

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு பொது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-23 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு பொது நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நோட்டரி வழக்கறிஞர் சுப்பையா தலைமை தாங்கினார். ராஜகோபாலப்பேரி கிராம பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணஜெயந்தி காவேரி, வாசகர் வட்ட தலைவர் ஆரோக்கியசாமி, கவுன்சிலர்கள் வீரகேரளம்புதூர் ஹேமா சரவணன், ராஜகோபாலப்பேரி நான்சி டோமினிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு நூலகர் வெற்றிவேலன் வரவேற்றார். நூலக வார விழாவை முன்னிட்டு நூலக பயன்பாட்டில் மாணவர்கள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், நூலகப் பணியாளர்கள் மகேஸ்வரி, ரேவதி, பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்