தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி
வாசுதேவநல்லூரில் தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.;
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் 2-வது தேசிய அளவிலான இணையவழி வினாடி-வினா போட்டி நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 19 சட்டக் கல்லூரிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்பட 13 சட்டக் கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் ஆந்திர மாநில கே.எல். நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தையும், தமிழக சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவி அநன்யாஸ்ரீ 2-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரத்தையும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களின் செயலாளர் எஸ்.டி.முருகேசன் வழங்கி வாழ்த்தினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் தொழில் வளர்ச்சி இயக்குனரகத்தின் சார்பில், வேளாண்மை சார்ந்த புத்தொழில் யோசனையை அறிமுகப்படுத்தும் போட்டி நடந்தது. மதுரை வேளாண்மை கல்லூரியில் நடந்த முதல்கட்ட போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண்மை கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழக தென்பிராந்தியத்திற்கான போட்டியில் பல்வேறு வேளாண்மை கல்லூரிகளைச் சேர்ந்த 16 குழுவினர் பங்கேற்றனர்.
இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில் 4 குழுவினர் தங்களது வேளாண்மை சார்ந்த தொழில் யோசனையை அறிமுகப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்பட்ட 5 குழுக்களில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் 2 குழுக்கள் முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்று பரிசு பெற்றனர். அடுத்தகட்டமாக கோவையில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கும் தேர்வாகி உள்ளனர்.