தேசிய ஜூடோ போட்டி: தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை

பதக்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.;

Update: 2023-11-22 11:17 GMT

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்ட 3 தமிழக மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்