தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-12-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தேசிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் தலைமையில் போலீசாரும், அமைச்சுப்பணியாளர்களும் தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், ரங்கராஜ், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்