சங்கரன்கோவில்:
9-வது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சங்கரன்கோவில் உள்ள ஏ.வி.ஆர்.எம்.வி. திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவினை சங்கரன்கோவில் தாசில்தார் பாபு மற்றும் நெல்லை சரக கைத்தறி உதவி இயக்குனர் மேகலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் கைத்தறி ரகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சங்கரன்கோவில் பகுதியில் நெசவாளர் பெருமக்களுக்கு நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூபாய் 4.50 லட்சத்திற்கு கடன் ஆணைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.