தபால் நிலையங்களில் ரூ.62 ஆயிரத்திற்கு தேசிய கொடி விற்பனை

வேலூர் கோட்ட தபால் நிலையங்களில் ரூ.62 ஆயிரத்திற்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-13 16:52 GMT

இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்காக தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் கடந்த 8-ந் தேதி முதல் ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமையும் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது.

இதில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் கடந்த 5 நாட்களில் 2 ஆயிரத்து 500 தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.62 ஆயிரத்து 500 ஆகும். மேலும் நாளை சுதந்திர தினம் என்பதனால் ஏராளமான பொதுமக்கள் தேசிய கொடியை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்