முன்கூட்டியே வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

வால்பாறை அருகே வீடுகளில் முன்கூட்டியே தேசிய கொடி ஏற்றப்பட்டது. சில இடங்களில் தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-10 16:17 GMT

வால்பாறை

வால்பாறை அருகே வீடுகளில் முன்கூட்டியே தேசிய கொடி ஏற்றப்பட்டது. சில இடங்களில் தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடுகளில் தேசிய கொடி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. இதுவரை 500 தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தபால் நிலைய அதிகாரி ஜீவானந்தம் ெதரிவித்தார். இது தவிர வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் 19 ஆயிரத்து 659 வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அவமரியாதை கூடாது

இந்த நிலையில் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பெரியகடை குடியிருப்பு பகுதியில் முன்கூட்டியே வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, வீடுகளில் வைத்திருக்கும்போது தேசிய கொடிக்கு எதிர்பாராதவிதமாக ஏதேனும் அவமரியாதை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் முன்கூட்டியே தேசிய கொடி ஏற்றப்பட்டது என்றனர். ஒருசில வீடுகளில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக கீழே இறக்கி சரி செய்யப்பட்டு, மீண்டும் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்