22 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தேசிய கொடி

22 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தேசிய கொடியை மேயர் வழங்கினார்.

Update: 2022-08-13 19:35 GMT

சிவகாசி,

75-வது ஆண்டு சுதந்திரதினத்தையொட்டி இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்திய நிலையில் சிவகாசி பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த மேயர் சங்கீதா இன்பம் திருத்தங்கல் பகுதியில் உள்ள 22 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தேவையான தேசிய கொடிகளை வழங்கினார். இதில் துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ண மூர்த்தி, மண்டல தலைவர்கள் குருசாமி, அழகுமயில் பொன் சக்திவேல், கவுன்சிலர்கள் செல்வம், சசிக்குமார், திருப்பதி, ஸ்ரீநிகா, சேதுராமன், துரைப்பாண்டி, சுதாகரன், சாமுவேல், மாரீஸ்வரி, சாந்தி சிவநேசன், மாணிக்கம், பொன்மாடத்தி, அதிகாரிகள் ரமேஷ், கந்தசாமி, செல்வம், ஆசிர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்