தேசிய விவசாயிகள் தினம்...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

நாடு முழுவதும் இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.;

Update: 2022-12-23 06:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடு முழுவதும் இன்று தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய உழவர் நாள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்!

குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது.

சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்