தேசிய உழவர் தின விழா

திருவாரூரில் தேசிய உழவர் தின விழா நடந்தது.

Update: 2022-12-25 18:45 GMT


திருவாரூரில் தேசிய உழவர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது. விழாவுக்கு டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேல்முருகன், ரவி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பாரம்பரிய விவசாயிகளுக்கு விருது வழங்கினார். விழாவில் வேலுடையார் கல்வி குழுமங்களின் தலைவர் தியாகபாரி, நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ், நுகர்வோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளர் வரதராஜன் வரவேற்றார். முடிவில் இயற்கை விவசாயி வீரதமிழன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்