தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது. கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் இ.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் பயன்கள் பற்றி படக்காட்சியுடன் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.