தேசிய ஆயுர்வேத தினம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய ஆயுர்வேத தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-22 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவில் 7-வது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் ஆயுர்வேத மருத்துவ பயன்கள், நன்மைகள் பற்றி விளக்கினார். சித்த மருத்துவ அலுவலர் லதா, நோய் தடுப்பு முறைகள் பற்றி விளக்கினார். ஓமியோபதி மருத்துவ அலுவலர் லட்சுமிகாந்த் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கினர். மேலும் ஆயுர்வேத கசாயங்கள், மூலிகை குடிநீர், அரிய வகை மூலிகை தாவரங்களை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்