சேலத்தில் மாரத்தான் போட்டி-பி.டி.உஷா தொடங்கி வைத்தார்

விநாயகா மிஷன்ஸ் நிறுவனத்தலைவர் சண்முகசுந்தரம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டியை தேசிய தடகள வீராங்கனை பி.டி.உஷா தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-07 22:17 GMT

மாரத்தான் போட்டி

விநாயகா மிஷன்ஸ் நிறுவனத்தலைவர் ஏ.சண்முகசுந்தரம் பிறந்தநாளையொட்டி, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக இணை வேந்தர் டத்தோ எஸ்.சரவணன், வேந்தர் ஏ.எஸ்.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தடகள வீராங்கனை பி.டி.உஷா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டி அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா சாலை, 4 ரோடு வழியாக மீண்டும் விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

பரிசளிப்பு விழா

இதில் ஆண்கள், பெண்கள். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தடகள வீராங்கனை பி.டி.உஷா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதல் 10 இடங்களை பெற்ற ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பி.கே.சுதிர், பி.எஸ்.மனோகரன், பதிவாளர் ஜெய்கர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்