நத்தம் விஜயாசனப்பெருமாள் கோவில் திருவிழா

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் விஜயாசனப்பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-26 15:53 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் விஜயாசனப் பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாகுதியும், பகல் 12.30 மணிக்கு பவித்ர மாலைகள்படி களையப்பட்டு ஆழ்வாருக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து திருவாராதனம், சாற்றுமுறை, தீர்த்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்