நரிக்குடி யூனியன் தலைவர் நீக்கம்

நரிக்குடி யூனியன் தலைவர் நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-06-14 20:55 GMT


விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர், பஞ்சவர்ணம். இவர் மீது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மொத்தம் உள்ள 14 கவுன்சிலர்களில் 12 பேர் ஆதரவு அளித்தனர்.

அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில், நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பஞ்சாயத்துராஜ் சட்டம் 212-வது பிரிவின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்