நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
நீடாமங்கலம் அருகே நரிக்குடியில் எமனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் விசேஷ பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுகின்றனர்.
சிறப்பு பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, நேற்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நரிக்குடி கிராமமக்கள் செய்திருந்தனர்.