போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நன்னிலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நன்னிலம்;
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக் கழக துணை தலைவர் சிகாமணி போதை பொருள் ஒழிப்பு குறித்து பேசினார். போதை மனித வாழ்க்கையை மட்டுமின்றி தனிமனித கவுரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை அழித்து உயிரையும் காவு வாங்குகிறது. எனவே இதை ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து நமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழியில் செல்லாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறினாா். நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், மத்திய பல்கலைக்கழக மருத்துவ அலுவலர் திலீபன் ராஜா மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.